தொடப்பக்கட்டையால் தாயை தாக்கிய மகன்: பெங்களூருவில் பரபரப்பு

beat
Last Modified திங்கள், 10 டிசம்பர் 2018 (09:18 IST)
பெங்களூருவில் தன்னைப் பற்று தனது தாய் பக்கத்து வீட்டாரிடம் அவதூறாக பேசியதாக கூறி மகன் தனது தாயை தொடப்பக்கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவன் தனது பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், சிறுவயதிலேயே, மது அருந்துதல், சிகிரெட் பிடித்தல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான். இது மட்டுமில்லாமல் சில பெண்களுடனும் இந்த வாலிபருக்கு தொடர்பு இருந்துள்ளது. 
 
இதனை அந்த சிறுவனின் தாய் பக்கத்து வீட்டாரிடம் கூறி புலம்பியுள்ளார். அவர்களும் அந்த வாலிபனை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நேராக வீட்டிற்கு சென்று தன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். கொடூரத்தில் உச்சமாய் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை தொடப்பக்கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
இதனை அந்த வாலிபரின் தங்கை வீடியோவாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, போலீஸார் அந்த கொடூர வாலிபரை கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :