கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய காவலர் : என்ன கொடுமை இது...?
சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடிபோதையில் இருந்த மாணவரை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையின் தலைமை காவலராக பணியாற்றிவரும் ராம் எனபவரின் 17 வயது மகன் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த ஆயுதப்படை காவலர் முருகேசன் குடிபோதையில் இருந்ததாகவும் ரகுராமின் மகனை வேண்டுமென்றே லத்தியால் பலமாக தாக்கியதாகவும் தெரிகிறது.
இதில் காயமைடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து ராம் ஆயுதப்படை காவலர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.