ஜாமீனில் வந்தும் திருந்தல… 4 வயது பெண் குழந்தையிடம் அத்துமீறிய இளைஞன்!

Last Updated: வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:29 IST)

கோயம்புத்தூருக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் அவர் கோயம்புத்தூரில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு பக்கத்து வீட்டில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டுள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக சொல்ல தினேஷ் மேல் சந்தேகமடைந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :