ஆளை சுருட்டிய மலைப்பாம்பு; விரைந்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
திருப்பத்தூர் மாவட்டத்தில் மலையடிவாரம் அருகே மலைப்பாம்பு ஒரு மனிதரை பிடித்து சுருட்டிய நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி மலை உள்ளது. இதன் அடிவாரப்பகுதியில் பொதுமக்கள் பலர் வாழ்ந்து வரும் நிலையில் மலைவாழ் ஜந்துக்களின் குறுக்கீடு அவ்வப்போது அங்கு நிகழ்வது உண்டு.
இந்நிலையில் மலையடிவாரத்தில் மலைப்பாம்பு ஒன்று நபர் ஒருவரை பிடித்து சுருட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்து உடனடியாக அவ்விடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை மலைப்பாம்பிடம் மீட்டுள்ளனர். பின்னர் மலைப்பாம்பை பத்திரமாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.
Edit By Prasanth.K