ஓ.பன்னீர் செல்வம் யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: கடம்பூர் ராஜூ
ஓ பன்னீர்செல்வம் யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்
அதிமுக தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் பெரும்பாலானோர் ஈபிஎஸ் பிரிவில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார் என்றும் அவர் யாருடன் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும் அதிமுகவில் இருந்து நீக்ககப்பட்ட பின்னர் அவரது நிலைப்பாடு குறித்து நாங்கள் கருத்து கூறினால் சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்
மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் ஆளுனரை சந்தித்த பின் அரசியல் பற்றி பேசினேன் என்று கூறியுள்ளார்.ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்கள் கருத்து என்றும் அவர் தெரிவித்தார்