1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:21 IST)

ஓபிஎஸ் பாச்ச பலிக்காது; அதிமுகவில் ஒற்றை தலைமையே !

ஒற்றை தலைமை கொள்கையில் மாற்றமில்லை என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேட்டி.


அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களையும் இணைத்துக் கொள்வோம் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படி குழப்பமான சூழல் இருக்கும் நிலையில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ,  ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட்டு முடிவு செய்து விட முடியாது. அரசியல் கட்சியை பொறுத்தவரை கட்சியை வழி நடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான். ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.