1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:45 IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் – டிராக்டர் ஏற்றிக் கொலை !

கரூர் மாவட்டத்தில் காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த அருகேயுள்ள பரமத்தி எனும் ஊரில் மனோகரன் மற்றும் சித்ரா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
 
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதையறிந்த சுதாகர் கோபத்தில் டிராக்டரை எடுத்துச் சென்று டூவீலரில் வந்துகொண்டிருந்த மனோகரன் மீது மோதியுள்ளார். பலத்த காயமடைந்த மனோகரன்  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
 
இதையடுத்து தலைமறைவான சுதாகரையும் சித்ராவையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.