புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (18:06 IST)

கர்ப்பிணி மனைவிக்கு’ காதல் புத்தகம் ’கொடுத்த கணவர் - வைரலாகும் வீடியோ

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவிக்கு வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் கெண்டல் கேவர்.இவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது மனைவிக்கு ஏற்படுத்த முடிவு செய்த கெண்டல், இரண்டு நால் உழைப்பில் ஒரு புத்தகம் தயாரித்துள்ளார். அப்புத்தகத்திற்கு சுவாசம் ( (breath ) என்று பெயரிட்டுள்ளார்.
 
அதில், தான் முதன் முதலாக மனைவியை சந்தித்த நாள் முதல் தற்போது வரை அழகான புத்தகத்தில்  தன் எண்ணத்தை அழகான எழுத்துக்களால் அச்சிடப்பட்டு அதை அப்படியே மனைவிக்கு படித்து காட்டுகிறார். அதைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைகிறார். இந்த வீடியோ இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பார்க்கப்பட்டு வைரலாகிவருகிறது.