செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (09:16 IST)

ஷெரின் எழுதிய காதல் கடிதம் யாருக்கு? 3 பேர் மீது சந்தேகம்!

பிக்பாஸ் வீட்டில் கவின், நான்கு பெண்களுடன் ஒரே நேரத்தில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஷெரின் காதல் வலையில் சிக்கியுள்ளார். அவர் எழுதிய காதல் கடிதம் யாருக்கு என்பதில் தற்போது பெரும் குழப்பம் உள்ளது.
 
ஷெரினுக்கு தர்ஷன் மீது காதல் என்று கூறப்பட்டாலும் தர்ஷனுக்கு வெளியே ஒரு காதலி இருப்பதால் அவர் ஷெரினிடம் சிக்க மாட்டார் என கருதப்படுகிறது. மேலும் ஷெரின் தனது காதல் கடிதத்தை பிக்பாஸூக்கு எழுதியதாக ஒருசிலர் கூறுகின்றனர்.
 
ஆனால் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவை பார்க்கும்போது முகின் மீது சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகத்தை மறைமுகமாக சாண்டி தெரிவிக்க முகின் திருதிருவென முழிக்கின்றார். மேலும் ஷெரின் எழுதி கிழித்து குப்பைத்தொட்டியில் போட்ட காதல் கடிதத்தை தர்ஷனை விட முகின் தான் ஆவலுடன் எடுத்து படிக்கின்றார். இந்த நிலையில் ,‘நீ எதற்கு அந்த லட்டரை படித்தாய்? நீ படிக்க வேண்டும் என்று கூறியிருந்தால் நானே உன் கையில் அதனை கொடுத்திருப்பேனே என்று ஷெரின் கூறுகிறார்.