இடுப்பில் இருந்து வேகமாக கத்தியை எடுத்த நபர் – பிறகு நடந்த விபரீதம் !

Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (08:31 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் இடுப்பில் வைத்திருந்த வைத்திருந்த கத்தியை எடுக்கும் போது தவறுதலாக வயிற்றில் குத்தி இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் மனோகரன்-சரிதா தம்பதியினர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனோகரன் தினமுக் சரிதாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சரிதா கோபித்துக்கொண்டு அயினாவரத்தில் உள்ள அவரின் தாய் சம்பூர்ணத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று வழக்கம்போல குடித்துவிட்டு சம்பூர்ணத்தின் வீட்டுக்கு சென்ற மனோகரன் அங்கு மனைவி சரிதா மற்றும் அவரது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சம்பூர்ணம் தன்னுடன் ஹோட்டலில் பணிபுரியும் கேஷியர் ராகவேந்திராவை வரவழைத்துள்ளார். அப்போது அங்கு நடந்த வாக்குவாதம் முற்றியுள்ளது.

அதனால் கோபத்தில் மனோகரன் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை வேகமாக எடுக்க அது எக்குதப்பாக அவரது வயிற்றைக் கிழித்துள்ளது. ஆனாலும் அவர் அந்தக் கத்தியை ராகவேந்திராவின் நெஞ்சில் குத்திவிட்டு மயங்கியுள்ளார். மனோகரனை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தி ஆழமாகக் கிழித்திருந்ததாலும் அவர் அளவுக்கதிகமாக மது அருந்தி இருந்ததாலும் அவர் இறந்துள்ளதாகத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :