வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (08:29 IST)

தாயின் காதலரைக் கொன்ற 19 வயது மகன் –வேலூரில் நடந்த கொடூரம்

வேலூரில் தனது தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரை 19 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்த ரகு என்கிற பீடித் தொழிலாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  பொது இடம் ஒன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கை விசாரித்து வந்த போலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன் விஜய்யைப் போலிஸார் கைது செய்தனர்.

விஜய்யிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் தாயான சங்கீதா தனது கணவரைப் பிரிந்து மகனோடு தனியாக வாழ்ந்து வருபவர். இதற்கு அவரது முறையற்ற காதல் உறவுகளேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் பீடித் தொழிலாளி ரகுவோடு பழக ஆரம்பித்துள்ளார். இது ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிய விஜய்யின் காதுபடவே பலர் இதுபற்றி பேசியுள்ளனர். இதனால் கோபமான விஜய் தன் தாயையையும் எச்சரித்தும் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் கோபமான விஜய் ரகுவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.