புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (17:54 IST)

சிறை கைதிகள் தீபாவளி கொண்டாட சிறப்பு ஏற்பாடு! – வளாகத்தில் பலகாரக்கடை!

எதிர்வரும் 27ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்படும் நிலையில் சிறைக்கைதிகளும் தீபாவளி கொண்டாட சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்திலேயே பலகாரக்கடையும் அமைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு பலகாரங்கள் கொடுக்க விரும்புவோர் அங்காடியிலிருந்து வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல மேலும் பல சிறைசாலைகள் கைதிகள் தீபாவளி கொண்டாட சில ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.