தொடர்புடைய செய்திகள்
- பெண்களே இல்லாத ’பன்றிக்கு நன்றி சொல்லி’ … ஒன்லி ஆண்கள் – ஏன் இப்படி ?
- என்னையா ஏமாற்ற பார்க்கிறாய் ? வீடியோ எடுத்து மிரட்டிய காதலனுக்குப் பாடம் புகட்டிய பெண் !
- தமிழகத்தின் ஜான்சி ராணியே! சிங்கப் பெண்ணே! – சசிகலா புஷ்பாவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்!
- டெல்லியில் வன்முறைக்கு இடையே ...இந்துப் பெண்ணை மணந்த இஸ்லாமிய இளைஞர்!!
- நீச்சல் குளத்துல குளிச்சா கர்ப்பமாகிடுவீங்க! – பெண் அதிகாரியின் பகீர் பேச்சு!
பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை வீடியோ – நாடகமாடி கையும் களவுமாக பிடித்த பெண் !
நாகர்கோவிலில் தான் குளிப்பதை வீடியோவாக எடுத்த நபரை சிக்கவைத்து போலிஸில் புகார் கொடுத்துள்ளார் ஒரு தைரியமான பெண்.
நாகர்கோவில் மாவட்டத்தில் காட்டுப் புதூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் இளங்கோ என்பவர் தன் வீட்டுக்கருகே மறைவான இடத்தில் குளிக்கும் பெண் ஒருவரை தினமும் பார்த்து நோட்டம் விட்டுள்ளார், இதையடுத்து அந்த பகுதியில் கேமாரவை வைத்து அவர் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் குளிக்கும் போது ஏதோ வித்தியாசமாக உணர, கேமராவைக் கண்டுபிடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பதற்றப்படாமல் அதை யார் வைத்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக சாதாரணமாக குளித்து வெளியே சென்றுள்ளார். அதையடுத்து சிறிது நேரம் கழித்து இளங்கோ வந்து அந்த கேமராவை எடுத்துள்ளார். அவரைக் கையும் களவுமாக பிடித்த அந்த பெண் சண்டைக்கு செல்ல அவரைக் கண்டபடி திட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க போலீஸார் தலைமறைவாக உள்ள இளங்கோவைத் தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
