தொடர்புடைய செய்திகள்
- பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு 3 மாதம் சஸ்பெண்ட்..
- ”தீய சக்திகளின் உருவம் தான் திருமாவளவன்”.. ஹெச்.ராஜா ஆவேசம்
- திருமாவளவனை செருப்பால அடிக்கனும்: பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்!
- பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் – கைது செய்யாமல் காப்பாற்றுகிறதா காவல்துறை ?
- முன்னாள் காதலிக்கு கல்யாண ஏற்பாடு – கத்தியால் குத்திய காதலன் சரண்டர் !
ஒரே ஒரு கேள்விதான்… ஹெச் ராஜாவை அமைதியாக்கிய நபர் – அப்படி என்ன கேட்டார் ?
திருமா வளவனுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து வீதிக்கு வந்து போராடும் காலம் இது என டிவிட்டரில் தெரிவித்த ஹெச் ராஜாவிடம் நச் சென்று ஒரு கேள்வி கேட்டுள்ளார் டிவிட்டர் வாசி ஒருவர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள் ஆபாசமாக இருப்பதாக கூறியதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என அவர் மீது மோசமான வசைகளை வைத்து வருகின்றனர் பாஜக நிர்வாகிகள்.பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் திருமாவளவனைப் பற்றி ஆபாசமாகப் பேசி வருகிறார். அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்காத பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா திருமாவளவனுக்கு எதிராக இந்துக்களை திசை திருப்பும் வேளைகளை செய்து வருகிறார்.
இது சம்மந்தமாக ஹெச் ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தினால் அவரகள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அதுபோல இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் இந்துக்களை சீண்டிக்கொண்டு தான் இருப்பார்கள். வீதிக்கு வரும் நேரமிது’ என அறைகூவல் விடுத்துள்ளார்.
அந்த பதிவில் ஹெச் ராஜாவிடம் கேள்வி எழுப்பும் விதமாக சிவக்குமார் எனும் டிவிட்டர்வாசி ‘ஐயா, நம் இந்து சொந்தம் ஒருவரை சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கன்னத்தில் அடித்துவிட்டார். அவரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும்’ எனக் கூற அவருக்கு எந்த பதிலும் அளிக்காத ராஜா அவரை பிளாக் செய்துள்ளார். இது சம்மந்தமாக அவர் ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர சமூகவலைதளங்களில் அது வைரல் ஆகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
