செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (12:38 IST)

திருமாவளவனை செருப்பால அடிக்கனும்: பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம். 
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது, மசூதி, சர்ச் மற்றும் கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் மசூதி, சர்ச் குறித்து பெருமையாகவும், கோவில் குறித்து சர்ச்சையாகவும் அவர் கூறியதை தொடர்ந்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இதனைத்தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றையிம் பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது, விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர்.
அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார். 
 
இந்நிலையில் நடிகையும், நட இயக்குனரனும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். இது இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.