1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (17:17 IST)

மதுரை பன் பரோட்டா கடைக்கு சீல்.! திடுக்கிடும் காரணம்

bun parotta
மதுரை பன் பரோட்டா கடைக்கு சீல்.! திடுக்கிடும் காரணம்
மதுரை பன் பரோட்டா கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் திடீரென சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மதுரையில் பன் பரோட்டா என்பது மிகவும் புகழ் பெற்றது என்பதும் இந்த பரோட்டாவை சாப்பிடுவதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பன் பரோட்டா கடைக்கு திடீரென உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 
 
சுகாதாரமற்ற முறையில் பன் பரோட்டா தயாரிப்பதாகவும் அதுமட்டுமின்றி பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்று சாலையை ஆக்கிரமித்து உணவகம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்