சென்னை - மதுரை தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்குமா? அதிகாரிகள் தகவல்
சென்னை மதுரை இடையே இயங்கிவரும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி பதிலளித்துள்ளார்
சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு பயணம் செய்யும் வகையில் தேஜஸ் ரயில் கடந்த சில மாதங்களாக இயங்கிவருகிறது.
இந்த ரயிலில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கைகள் காலியாகவே இயங்கி வருகின்றன என்றும் அதனால் இந்த ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கும் இந்த ரயில் தாம்பரத்தில் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்