1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (16:00 IST)

மதுரை பல்கலை தவறை திருத்தி கொண்டதால் மகிழ்ச்சி: பாமக நிறுவனர் ராமதாஸ்

Ramadoss
மதுரை பல்கலை தவறை திருத்தி கொண்டதால் மகிழ்ச்சி என பாமக நிறுவனர் டாகர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு  அறிவிக்கப்பட்டிருந்த உயர்வகுப்பு  ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
 
காமராசர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது.  எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்பட்டு 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!
 
தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை செம்மையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது. இது குறித்தும் அரசு ஆய்வு செய்து சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்!