ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (10:52 IST)

சென்னை, மதுரையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்; அதிரடி உத்தரவு

Masks
சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 700 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் வரும் வழக்கறிஞர்கள் வழக்கை சேர்ந்தவர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது 
 
இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது