வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

எம்பி பதவி வேண்டுமென்றால் பாஜக காலை பிடியுங்கள்: இஸ்ரோ தலைவருக்கு மதுரை எம்பி கண்டனம்!

Venkatesan
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எம்பி பதவி வேண்டும் என்றாலோ அல்லது கவர்னர் பதவி வேண்டும் என்றால் பாஜக கால்களை கொள்ளுங்கள் என்றும் ஆனால் பணியில் இருக்கும் போது இந்திய மொழிகளை அவமதித்தால் அதை எதிர்ப்போம் என்று மதுரை எம்பி வெங்கடேசன் ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய மொழிகளின் தாய்மொழி சமஸ்கிருதம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான கருத்தை தெரிவித்து உள்ளார்
 
இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எம்பி பதவி அல்லது ஆளுநர் பதவி வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்று அல்லது பாஜக அலுவலகத்திற்கு அவர்களது கால்களை பிடியுங்கள் என்றும் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
ஆனால் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மொழிகளை அவமதித்தால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பள்ளி