திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (16:20 IST)

’சூர்யா 42’ படம் 10 மொழிகளில் வெளியாகும்: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தகவல்!

gnanavelraja
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை இன்று காலை 7 மணிக்கு சென்னையில் நடைபெற்றது
 
இந்த பூஜையில் சூர்யா, சிறுத்தை சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும், பூஜை குறித்த புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகிறது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இது ஒரு பான் இந்தியா திரைப்படம் வேண்டும் தமிழ் தெலுங்கு கன்னடம் ஒரியா மராத்தி இந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது