1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:03 IST)

ஸ்ரீ ஷீரடி சாய் நாதரின் அற்புத பொன்மொழிகள் !!

உன்மனதில் உள்ள குமுறலை நான் அறிவேன் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் என்கிறாயா?, கஷ்டம் யாருக்கு இல்லை, படைத்து காக்கும் இறைவனுக்கும் கஷ்டம் இருக்கிறது.


நீ முந்தைய கர்ம வினையால் அவதிபடும் போது, என் நாமத்தை உச்சரிக்கும் போது யாகத்தில் எரிகின்ற தீ போல் உன் கர்ம வினைகள் எரிந்துவிடும்.

என் நாமமே உனக்கு பாதுகாப்பு கவசமாய் இருக்கும். வேறு எதுவும் உன்னை தீண்டாது. முட்களால் குத்தி காயப்பட்டு உன் பாதம் இனி மேல் மலர் மேல் நடக்க போகிறது.

நீ ஒரு காரியத்திற்காக போகிறாய் என்றால் உனக்கு முன்னரே சென்று உன் தேவையை பூர்த்தி செய்து காரியத்தை முடித்து வைத்து இருப்பேன். அதனால் நீ மகுடமாய் உயர போகும் காலம் வந்து விட்டது, நீ தேடிய அலைந்தது எல்லாம் இனி உன் கையில் வந்து சேரும். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே.

உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது, அழுகையில் என் கண்ணீரும் இருக்கிறது.

உன் கோபத்தில் உன்னை அமைதியாக்கி உன்னை நல்வழி படுத்த வேண்டும் என்ற பொறுப்பும் எனக்கு உள்ளது. நீ எல்லா செல்வ வளங்களையும் பெறுவாய்.