1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai MP Venkataesan tested corona positive

மதுரை எம்ப சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

மதுரை எம்பி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆறு மாதங்களாக இருந்துவரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பல விஐபிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
மேலும் கொரோனாவால் ஜெ அன்பழகன் எம்.எல்.ஏ மற்றும் வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட ஒருசில விஐபிகள் பலியாகி உள்ளனர் என்பதும் சோகமான செய்தி ஆகும். இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தோப்பூரில் உள்ள நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென மதுரை மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள்: 26 முதல் முன்பதிவு தொடக்கம்