என்னாச்சு ஹரி அருண் விஜய் படம்? கைவிரித்த தயாரிப்பாளர்!

Last Modified வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:35 IST)

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்க இருக்கும் படத்தை தயாரிப்பதில் இருந்து தயாரிப்பாளர் இந்தர் குமார் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹரி சூர்யாவுக்காக தயார் செய்த கதைதான் அருவா. ஆனால் அந்த படத்தின் கதை பிடிக்காததால் சூர்யா நிராகரிக்க அதை அப்படியே தன் மைத்துனரான அருண் விஜய்யை வைத்து இயக்க முடிவு செய்தார். ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம்.

ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு
செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். அதனால் அந்த படத்திற்கான எந்த வித முன்னேற்றமும் இல்லை என சினிமா வட்டாரத்தில் சொல்ல்ப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த படத்தை அருண் விஜய்யின் நண்பரான இந்தர்குமார் தயாரிக்க முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் அவரே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இந்திர குமாரும் படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளாராம். இதனால் அந்த படத்தின் பட்ஜெட் குறைக்கப்படலாம் அல்லது வேறு தயாரிப்பாளருக்கு மாறலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :