வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (15:38 IST)

திமுகவில் இருந்து மிசா பாண்டியன் நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 
 
மதுரை சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் 
 
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து அப்துல் வகாப் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னால் அமைச்சர் மைதீன்கான்  நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
Edited by Siva