வியாழன், 21 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (16:03 IST)

ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு நடிகர் சூர்யா வரவேற்பு

கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டது.  இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

பின்னர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அப்போதைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இவ்வழக்கின் மீதான விசாரணை முடிந்து,  நேற்று  தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ‘’ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையில்லை என்று தெரிவித்துள்ளது.

இது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ’’நம் கலாச்சசாரத்துடன் ஒன்றிணந்தது ஜல்லிக்கட்டு என்பதை உணர்த்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  மாநில அரசிற்கு வாழ்த்துகள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வணங்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.