செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (13:15 IST)

கள்ளக் காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்!

love affair
பீகார் மாநிலத்தில் தன் மனைவி நேசித்த கள்ளக்காதலனை வரவழைத்து மனைவியை அவருடன் சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா என்ற பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவருடைய கணவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியர்க்கு  2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அப்பெண்ணுக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாலிபருக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறியது. இளம்பெண் வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். தனிமையில் இருவரும் சந்தித்துள்ளனர்.

கணவன் வேலைக்குச் சென்றபோது இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார். இதையறிந்த அருகில் வசிப்போர் வீட்டை முற்றுகையிட்டு அவர்கள் இருவரும் ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர். அப்போது, ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞரை தாக்கினர். இதில், அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த இளம்பெண்ணின் கணவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று கண்ணீர் வடித்துள்ளார்.

அதன்பின்னர், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து அப்பெண் தான் செய்த தவற்றை உணர்ந்து அழுததாகக் கூறப்படுகிறது

பின், கணவர் இருவரையும் ஆசீர்வதிக்கவே, அப்பெண் கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு அங்கிருந்து கள்ளக் காதலனுடன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.