டெங்குவுக்கு டாக்டர் பலி: தொடரும் இறப்புகள்!
மதுரையில் டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சிலர் டெங்குவால் பலியாகி வருகின்றனர்.
மதுரையில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் பிருந்தா. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரே டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் மன்னார்குடி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மூன்று வயது மகன் வசந்தகுமார் டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.