ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:21 IST)

மதுரை திமுக எம்.எல்.ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த நிர்வாகி உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

மதுரையில், எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி வீட்டின் முன்பு நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை மானகிரி கணேசன் என்பவர் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி  வீட்டின் முன் தீக்குளித்த நிலையில், படுகாயங்களுடன் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது உடலில் 90 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான கோ.தளபதியின் வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரையில் உள்ள நிலையில் அங்கே வந்த மதுரையை சேர்ந்த  திமுக பிரமுகர் கணேசன்  திடீரென எம்.எல்.ஏ தளபதி வீட்டு வாசலில் நின்றபடி திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள்  அதிர்ச்சி அடைந்து, கணேசனை காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் அவரது உடல் முழுவதும் தீக்காயம் பரவியது. இதையடுத்து கணேசன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Edited by Siva