1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (18:45 IST)

அரசியலின் கத்துக் குட்டி அண்ணாமலை - அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்!

கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்ட கழகம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என்.கே. கர்ணன் ஏற்பாட்டில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை, கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் வழங்கப்பட்டது. 
 
அப்போது பேசிய  இளம்பை‌..... 
 
அரசியலின் கத்துக் குட்டி ஆட்டுக்குட்டி அண்ணாமலை இதோடு தனது நாவை அடக்கி கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாவு அடக்கப்படும் எனவும் கழகப் பொதுச் செயலாளரின் அரசியலின் அனுபவமே பாரதிய மாநில தலைவர் அண்ணாமலையின் வயது எனவும் திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு எங்களது கழக பொதுச் செயலாளரை தரகுறைவாக பேசும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை இதோடு தனது நாவை அடக்கி கொள்ள வேண்டும் எனவும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனி பெருபான்பையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சர் ஆவார் எனவும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன், காரை ஊராட்சி மன்ற தலைவர்  கலையரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.