புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (19:01 IST)

பஸ் கண்ணாடியை உடைத்த ’குடிகாரர்’ ; பொதுமக்கள் ’ தர்ம அடி’

மதுரை மாவட்டத்தில் இயங்கும்  அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். நடத்துனர் அவரிடம் டிக்கெட் எடுக்கும் படி கூறினார். ஆனால் அவர் தகராறு செய்ததுடன்  பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரையில் ஆர்.எஸ் மங்கலத்தில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் ஒரு இளைஞர் இருந்தார்.

அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கேட்டுள்ளார். அந்த இளைஞர் மது போதையில் இருந்ததால் மறுப்புத் தெரிவித்ததுடன், நடத்துனரிடம் தகராறு செய்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் பேருந்தில் அவரது இம்சை அதிகரிக்கமோ நடத்துனர் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டார். ஆனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் கல்லை எடுத்து பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளார்.
 
இதனால் சக பயணிகள் அனைவரும் சரமாரியாக அவரை தாக்கினர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து போலீஸிடம் இளைஞரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.