1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (11:07 IST)

பொள்ளாச்சியை தொடர்ந்து சேலத்தில் அரங்கேறிய அவலம்: இத்தனை பெண்களை சீரழித்தார்களா???

பொள்ளாச்சியை போலவே சேலத்திலும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த கும்பல் தற்போது போலீஸில் சிக்கியுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், முருகன், சபரிராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 
 
கைதான 4 பேரும் பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே சேலத்தில் இதேபோல் ஒரு அயோக்கிய கும்பல் பெண்களை மிரட்டி பணம் பறித்தும் பாலியல் பலாத்காரமும் செய்து வந்துள்ளனர்.
 
சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலம் அருகே கடந்த 22ம் தேதி இரவு 10 மணியளவில் சுந்தரம் என்பவர் தனது காதலியுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் அவர்களிடமிருந்து நகையை பறித்தது. அவர்களை ஆபாசமாக படமெடுத்தும், அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் உள்ளனர். 
 
ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்த காதல்ஜோடி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த தினேஷ் மணிகண்டன், சுபாஷ் உள்ளிட்ட 4 அயோக்கியன்களை கைது செய்தனர். 
 
அவன்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. கடந்த 2 வருடங்களாக இரவு நேரங்களில் அந்த பகுதியில் பேசிக்கொண்டிருக்கும் காதலர்களை மிரட்டி நகை பணத்தை பறித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை 100 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
மானத்திற்கு பயந்து இதுவரை எந்த பெண்களும் போலீஸில் புகாரளிக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.