ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (12:03 IST)

சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ நோய்..

சென்னையில் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அட்ரினோ வைரஸால் ஏற்படும் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய், வெப்பநிலைக்கு ஏற்றவாறு அதிகமாக பரவும். குறிப்பாக கோடைக் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக பரவும்.

இதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் சுமார் 850 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கண் நோய் பொதுவாக ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.