புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (11:01 IST)

அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டை வீசியது மாணவனா? அதிர்ச்சி தகவல்

அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டை வீசியது மாணவனா?
நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா மேம்பாலம் அருகே மர்ம நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
அதிமுக கொடிகொண்ட கார் ஒன்றின் மீது அவர்கள் நாட்டு குண்டு வீசியதாகவும் ஆனால் குறி தவறியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர் 
 
இந்த சிசிடிவி கேமரா வீடியோக்களின் அடிப்படையில் தற்போது இரு சக்கர வாகனம் அடையாளம் தெரிய பட்டுள்ளதாகவும் அதன் உரிமையாளர் குறித்த தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் நந்தனம் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் 
 
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது ஒரு மாணவன் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது