1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madhuranthagam and dharapuram vote count today

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!. இன்று வாக்கு எண்ணிக்கை!..

vijay stalin
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏழு பேர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்ததால் அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருக்கிறது. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மொத்தம் 49 வேட்பாளர்கள் களமிறங்கினர். அதில் முக்கியமாக தவெக, திமுக, அதிமுக என மும்முனை போட்டி நிலவியது. வருகிறது. தவெகவை பொறுத்த வரை இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறது.

அதிமுகவோ ஏற்கனவே வென்ற தொகுதிகள் என்பதால் மீண்டும் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என நினைத்தது. திமுகவும்  இரண்டு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அல்லது இரண்டாம் இடத்திற்காவது வரவேண்டும் என இறங்கி வேலை பார்த்தது.

இந்நிலையில், தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. இன்று காலை 11 மணியளவில் யாருக்கு வெற்றி என்கிற நிலவரம் தெரிந்து விடும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...