1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dharapuram madhuranthagam vote count tomorrow

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

election
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியும் தவெகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கம்யூனிஸ்டு கட்சிகள் தவெகவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தவெகவின் பலம் கூடுவதோடு 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் தவெக ஆட்சி கவிழாது.

ஒருபக்கம், இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக நினைக்கிறது. எனவேதான், எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் செய்தார். ஒருபக்கம் இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுகவும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறது. ஏனெனில், இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டால் திமுக கலகலத்துக்கு போய்விடும். அதனால்தான்,  முக ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தவெகவை பொறுத்தவரை முதல்வர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் கூட்டத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல், அந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள எல்லா அனைத்து கிராமங்களுக்கும் ரோட் ஷோ சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

2021 சட்டமன்ற தேர்தலை ஒப்பிட்டால் இரண்டு தொகுதிகளிலும் குறைவான வாக்குகளே பதிவாகியிருக்கிறது. அதாவது மதுராந்தகம் தொகுதியில் 7.23 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 9.58 சதவீதமும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது, இரண்டு தொகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அதற்கு காரணம் வெளியூரில் வேலை செய்பவர்கள், கல்லூரிகளில் மாணவர்கள் வாக்கு செலுத்த சொந்த ஊருக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், தவெக கலக்கத்தில் இருக்கிறது.
இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 9ம் தேதியான நாளை எண்ணப்படவிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் எந்த கட்சி வெற்றி பெறப்போகிறது என்பது நாளை காலை தெரிந்து விடும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..