1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madhan photo went viral in net

சேனல் விஷனில் என்ன பிரச்சனை – நெஞ்சில் தீக்காயத்துடன் நெறியாளர் மதனின் புகைப்படம்!

மதன்
சேனல் விஷன் தொலைக்காட்சி ஊடக நெறியாளர் மதனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நெறியாளர் மதன். அவர் நேர்காணல் செய்யும் எல்லா பிரபலங்களின் வீடியோக்களும் பரபரப்பாக பேசப்படும். மதனும் நீண்ட காலம் ஒரு தொலைக்காட்சியில் இல்லாமல் அடிக்கடி தொலைக்காட்சி மாறிக் கொண்டே இருப்பார்.

இதையடுத்து கடைசியாக அவர் சேனல் விஷன் என்ற யுட்யூப் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வந்தார். அந்த தொலைக்காட்சியை அதிமுகவைச் சேர்ந்த தஞ்சை ஜீவா நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சேனல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே அவர் இப்போது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் நெஞ்சில் தீக்காயங்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி உள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் மதனுக்கு வெந்நீர் ஊற்றி நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மதனின் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து எந்தவொரு அப்டேட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.