செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 மே 2020 (09:41 IST)

காடுவெட்டி குரு மருமகனுக்கு அரிவாள் வெட்டு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

காடுவெட்டி குரு மருமகனுக்கு அரிவாள் வெட்டு
பாமகவின் முக்கிய தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமீபத்தில் அக்கட்சியினர்களால் அனுசரிக்கப்பட்ட நிலையில் தற்போது காடுவெட்டி குரு மருமகன் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஜெயங்கொண்டான் பகுதியில் உள்ள காடுவெட்டி குரு வீட்டிற்கு அருண்குமார் என்பவர் நேற்றிரவு வருகை தந்துள்ளார். அதன்பின்னர் அவர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பும் போது, காமராஜர் என்பவர் அவரை வழிமறித்ததாகவும், அவரது வாகனத்தை பறிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் என்பவர் தனது சகோதர் மதனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமராஜரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். 
 
அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த காமராஜர் தரப்பினர், காடுவெட்டி குரு மருமகன் மனோஜின் சகோதரரான மதன் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் மனோஜுக்கும் காயம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக மேலும் பிரச்சனை வராமல் இருக்க காடுவெட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது