வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (20:59 IST)

2வது திருமணமும் தோல்வி: சிவகார்த்திகேயன் பட நடிகை போலீசில் புகார்

சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவர் தன்னை சித்திரவதை செய்ததாக போலீசில் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மான்கராத்தே படத்தில் நடித்த துணை நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறாது.  இதனையடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
 
ஆனால் கணவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பது தனக்கு தாமதமாக தெரிய வந்ததாகவும் இதனால்தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது கணவரின் முதல் மனைவியும் தனது கணவரும் சேர்ந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்து வருவதாகவும் சில சமயம் கணவர் தனது நண்பர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் தன்னை சித்ரவதை செய்வதாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்