ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (13:39 IST)

நேரம் இல்லைன்னு சொல்லாதீங்க! திருச்சி – தஞ்சை பைபாஸில் ஓடிய அமைச்சர்!

Ma subramaniyan
தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய அமைச்சர் பைபாஸில் ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் மா.சுப்பிரமணியன். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய அனைவரையும் உத்வேகம் அளிக்கும் வகையில் அவ்வபோது மாரத்தான் போட்டிகளில் ஓடுவது, தினசரி உடல்பயிற்சி செய்வதை வீடியோவாக வெளியிடுவது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்து வருகிறார்.

இன்று தஞ்சாவூர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றவர், அங்கிருந்து தஞ்சாவூருக்கு பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது தினம்தோறும் அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 10 கி.மீ இறங்கி ஓடி சென்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இன்று காலை 10மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியிக்கு காலை 6மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் 7.15மணிக்கு திருச்சியில் இறங்கி2.30 மணி நேரம்வீணாகி விடக்கூடாதுஎன திருச்ச- தஞ்சை Bypassல் 10km ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டோம்இப்பதிவு உடற் பயிற்சி செய்யநேரமில்லை என்று சொல்பவர்களுக்காக” என்று குறிப்பிட்டுள்ளார்.

Edit By Prasanth.K