வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (10:30 IST)

’பூஸ்டர், மாஸ்க், படுக்கை..! கொரோனாவை எதிர்கொள்ள தயார்!’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் பல மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடைபெற்ற நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஒத்திகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K