செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (08:05 IST)

மோடியை நேரில் சந்திக்கிறாரா ஸ்டாலின்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை ஜூன் 16 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் வரும் 16 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வராக பதவியேற்பவர்கள் மரியாதை நிமித்தமாக பிரதமர்களை சந்திப்பது இந்திய அரசியலில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்தான்.

திமுக ஒன்றிய அரசான பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் முதல்வர் மற்றும் பிரதமர் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.