1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (18:29 IST)

செங்கல்பட்டு சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

Stalin's
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
 
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் முக ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது