1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lyricist Pulamai pithan passed away

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்; அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி!

Cinema
தமிழ் சினிமாவின் பாடாலாசிரியராகவும், முன்னாள் அரசவை கவிஞராகவும் விளங்கிய புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் பல காலமாக பாடலாசிரியராக இருந்து வந்தவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரின் பிரபலமான “நீ யார் நான் யார்” பாடல் முதல் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் அதிமுக ஆட்சியில் அவை கவிஞராகவும் மரியாதை செய்யப்பட்டவர் புலமைப்பித்தன்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்தார். அவரது இழப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கேரள பயணத்தை தவிர்க்கவும் - கர்நாடக அரசு