வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (09:15 IST)

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு குறைந்துள்ள நிலையில் புயல் உருவாவதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் தமிழக நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக நேற்றை வலுவடையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது நின்ற நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. இதனால் அது புயலாக மாறும் நேரமும் தாமதமாகியுள்ளது.

 

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கி.மீ தொலைவில் மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் இது ஃபெங்கல் புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் 30ம் தேதியில் இந்த புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்படுகிறது.

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று வரை டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று அப்பகுதிகளில் மழை குறைந்துள்ளது. அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால் பகுதிகளில் மழை தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K