செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (07:49 IST)

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

EVKS
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் உடல்நலக் குறைவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல காங்கிரஸ் பிரமுகர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ அவர்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இதய பாதிப்புக்காக சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு சென்று இ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva