சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு
வங்க கடலில் உருவான 'ஃபெங்கல்' புயல் சென்னை அருகே தான் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் நேற்று முன்தினம் உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தற்போது அது புயலாக மாறி உள்ளது என்பதும், இந்த புயலுக்கு 'ஃபெங்கல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த புயல் சென்னை மற்றும் கடலூர் இடையே பரங்கிப்பேட்டை பகுதியில் வரும் 30ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ]
நவம்பர் 30ஆம் தேதி சென்னை - கடலூர் இடையே 'ஃபெங்கல்' கரையை கடக்கும்போது, சென்னையில் அதிக மழை பெய்யும் என்றும், புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல் மிதமான மழை தொடங்கி, புயல் கரையை கடக்கும்போது 30 ஆம் தேதி கன மழை கொட்டி தீர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran