3 தொகுதிகளில் வெற்றி கன்பர்ம்... 2 தொகுதிகளில் வாய்ப்பு அதிகம்.. பாஜக மேலிடம் எடுத்த சர்வே..!
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பாஜகவின் வெற்றி எப்படி என்பது குறித்து பாஜக தலைமை ரகசிய சர்வே எடுத்ததாகவும் அதில் தமிழகத்தை பொறுத்தவரை மூன்று தொகுதிகளில் வெற்றி உறுதி இரண்டு தொகுதிகளில் இன்னும் அதிகமாக வேலை செய்தால் வெற்றி கிடைக்கலாம் என்று சர்வே முடிவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஐந்து தொகுதிகளில் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் வெற்றி உறுதி என்று ரகசிய சர்வேயில் கூறப்பட்டுள்ளது
அதேபோல் நெல்லையில் நயினார் நாகேந்திரன் மற்றும் நீலகிரியில் எல் முருகன் ஆகிய இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்த சர்வே கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதேபோல் கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 15 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது/ ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி கட்சிகளின் பலம் காரணமாக நல்ல வெற்றி கிடைக்கும் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.