திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (11:15 IST)

என்னை தேர்தலில் போட்டியிடவிடாமல் செய்த அனைவருக்கும் நன்றி: திருநாவுக்கரசர்

கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாக திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அவருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருச்சி தொகுதி திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டி இடுகிறார்.

இந்த நிலையில் திருச்சி தொகுதியை கிடைக்காமல் போனது திருநாவுக்கரசருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக்கூடாது என இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும். மீண்டும் தொகுதி மக்களுக்கு நன்றியும் வணக்கமும்’ என்று திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Edited by Siva