1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (16:10 IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள்: கார்த்தி சிதம்பரம்

Karthi Chidambaram
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிடாவெட்டி சாமி கும்பிட தடை செய்வார்கள் என்றும் நமது பழக்க வழக்கங்களுக்கு தடை செய்துவிட்டு சமஸ்கிருத முறையில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார்கள் என்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது வெறும் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் அல்ல, நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்றும் அவர் கூறினார். தமிழக மக்கள் கட்டும் வரிப்பணம் வட மாநிலத்திற்கு செலவு செய்யப்படுகிறது என்றும் இந்த நிலை மாற வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் தமிழக அரசின் முத்தான திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் கை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் முதலமைச்சர்களை கைது செய்யும் அளவுக்கு நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்றும் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Edited by Siva